செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 மே 2022 (10:19 IST)

தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை - மக்கள் மகிழ்ச்சி!

சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. கடந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் தற்போது வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.80 வரை கணிசமாக குறைந்துள்ளது.