வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:12 IST)

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்றும் நேற்று கூட 14 மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவானதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அச்சத்துடன் கோடையை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் உள்ள உள் மாவட்டங்கள், பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran