செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (18:17 IST)

உலகில் மிக அதிவேக மின்னல் மனிதர் இவர் தான் !

உலகில் மிக அதிவேக மின்னல் மனிதர் இவர் தான் !

கம்பளா எருமை மாட்டு பந்தயத்தில் சீனிவாச கவுடா சமீபத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நான்கே நாட்களில் சீனிவாச கவுடா சாதனையை மற்றொரு வீரர் முறியடித்து சாதனை செய்துள்ளார்.
 
கர்நாடாவில் பிரபலமான கம்பளா எனும் எருமை மாடு பந்தயத்தில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் சீனிவாச கவுடா. இவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சி அளிக்கவும் தயார் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த வாய்ப்பை சீனிவாச கவுடா உதறினார்.
 
இந்த நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற மற்றொரு கம்பளா வீரர் தற்போது 143 மீ தொலைவை 13.68 நொடிகளில் கடந்துள்ளார். இதன்படி பார்த்தால் இவர் 100மீ தொலைவை 9.51 வினாடிகளில் கடந்துள்ளார் என்பதால் இவர் உசேன் போல்ட் மற்றும் சீனிவாச கவுடா ஆகிய இருவரின் சாதனையையும் முறியடித்துள்ள நிலையில், சுரேஷ் ரெட்டி என்பவர், 145 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 12.76 வினாடிகளில் கடந்து மூன்றுபேரின் சாதனைகளையும் முறியடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் சீனிவாச கவுடாவுக்கு கொடுக்க முன்வந்த ஒலிம்பிக் பயிற்சியை சுரேஷ் ஷெட்டிக்கு மத்திய அரசு வழங்கி இவரை அங்கீகரிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.