சிறந்த பேட்ஸ்மேன் கோலியா? ஸ்மித்தா? என்ன சொல்கிறார் சச்சின்?

Sachin answers on Virat Kohli or Steve Smith
Arun Prasath| Last Updated: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (19:54 IST)
விராட் கோலி-ஸ்டீவ் ஸ்மித்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்ற கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா? அல்லது ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேனா? என்று பல நாட்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்குள் விவாதம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதே கேள்வியை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது அவர், “நாம் ஒப்பிடக்கூடாது, இருவரும் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கிறார்கள், இது எங்களுக்கு மகிழ்ச்சி” என பதிலளித்துள்ளார்.


Sachin answers on <a class=Virat Kohli or Steve Smith" class="imgCont" height="417" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2020-02/07/full/1581085489-3818.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="Sachin answers on Virat Kohli or Steve Smith" width="740" />
சச்சின் டெண்டுல்கர்

மேலும், “ஒப்பீடுகளை நான் விரும்புவதில்லை, மக்கள் என்னை பல கிரிக்கெட் நண்பர்களோடு ஒப்பீட முயற்சித்தார்கள். நான் அவர்களுக்கு எங்களை விட்டுவிடுங்கள் என கூறிவிட்டேன்” என்று பேசினார்.இதில் மேலும் படிக்கவும் :