செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (14:29 IST)

144 தடை- தடுத்து நிறுத்தப்பட்ட வாகனம்... நடை பயணத்தை துவங்கிய பிரியங்கா காந்தி!!

பிரியங்கா காந்தி உ.பி.யில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முற்பட்ட போது அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. 

 
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல், இதை அவர் வெளியில் சொல்லாதிருக்க அந்த பெண்ணின் நாக்கை வெட்டியதோடு, கடுமையாக தாக்கி சாலையில் வீசி சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
 
தேசிய அளவில் இந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். 
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்  பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். 
 
ஆனால், வருகைக்கு முன்னதாக ஹத்ரஸில் 144  விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கிராமத்திற்குள் நுழைவதற்கு ஊடகங்களுக்கும் தடை விதிக்கபட்டு உள்ளது.  இதனை மீறியும் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முற்பட்ட போது அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் நடந்து சென்றுள்ளார் பிரியங்கா காந்தி.