வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 டிசம்பர் 2025 (17:16 IST)

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!
ஹரியானாவை சேர்ந்த பூனம் என்ற பெண், தனது நான்கு வயது மகன் உட்பட நான்கு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , தன்னைவிட அழகாக இருந்த இளம் பெண்களையும் கொன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
 
பூனத்தின் கொடூரம் 2021-லேயே தொடங்கியது. அப்போது தன் இரண்டு வயது அண்ணன் மகள் விதி மீது கொதிக்கும் தேநீரை ஊற்றியுள்ளார். விதி உயிர் பிழைத்தாலும், அதன்பின் நடந்த திருமண விழாவில், ஆறு வயது விதியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பூனம் கொலை செய்துள்ளார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளில், பூனம் தனது நாத்தனாரின் ஒன்பது வயது மகள் இஷிகா , தனது மகன் சுபம் , எட்டு வயது சிறுமி ஜியா மற்றும் விதி என நான்கு குழந்தைகளை கொலை செய்துள்ளார். முதல் கொலையின் சந்தேகத்தை மறைக்கவே, தன் மகன் சுபத்தை கொன்றிருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது.
 
கைது செய்யப்பட்ட பூனம், தான் கொலைகளை செய்ததை ஒப்புக்கொண்டார். விதியின் தந்தை சந்தீப், பூனத்திற்கு மரண தண்டனை வழங்க கோரியுள்ளார். மேலும், அவர் பிடிபடாமல் இருந்திருந்தால், மேலும் பல குழந்தைகள் பலியாகியிருப்பார்கள் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.
 
Edited by Mahendran