1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified சனி, 23 ஜூன் 2018 (19:55 IST)

இறந்ததாக டாக்டரால் அறிவிக்கப்பட்டவர் உயிரோடு எழுந்த அதிசயம்

ஹரியானாவை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் டாக்டரால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹரியானாவை சேர்ந்த பானிபட் என்ற பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஒருவருக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் அவர் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டார்
 
இதன்பின்னர் அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் இறந்த நபரின் உடலில் இருந்து வியர்வை சுரப்பதை அவரது உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிருடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் உடனடியாக மீண்டும் சிகிச்சையை தொடர்ந்தனர். இதுகுறித்து அந்த நபரின் உறவினர்கள் கூறியபோது 'அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அலட்சியமாக உயிருடன் உள்ள ஒரு நபரை இறந்ததாக அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது