1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (13:37 IST)

கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்- பெண் தூக்கிட்டு தற்கொலை

sahana
கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த  பெண் சஹானா ஷாஜியிடம் அவரது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த  பெண் சஹானா ஷாஜி. இவருக்கு கட்டக்கடா பகுதியைச் சேர்ந்த நவ்பல் என்பவருக்கும்  3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது,   நவ்பல் குடும்பத்தினருக்கு  75 சவரன் நகை வரதட்சனையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.இந்த நிலையில், திருமணமானது முதல் கூடுதல் வரதட்சனை கேட்டு குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து, சஹானா தன் குழந்தையுடன் வண்டித்தனத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, சாஹானாவின் தாய் வீட்டிற்குச் சென்று மனைவியை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கி தன் வீட்டிற்கு வந்துள்ளார் நவ்பால்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து  போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று,  பிரேதத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.