வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (11:23 IST)

கையெழுத்துப் பயிற்சி: மருத்துவர்களுக்கு செக் வைத்த அரசு

மத்தியபிரதேச அரசு மருத்துவர்களின் கையெழுத்தை சீர் செய்ய அவர்களுக்கு கையெழுத்து பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவர்கள் எழுதும் கையெழுத்து பெரும்பாலும் யாருக்குமே புரியாது. அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டை நோயாளிகள், மருந்துக் கடையில் போய் கொடுத்தால், மருந்து கடைகாரருக்குமே பல சமயம் மருத்துவர்களின் கையெழுத்து புரியாது. இதனால் தவறான மருந்தை உட்கொண்டு பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இதேபோல் மத்தியபிரதேசத்தில், மருத்துவர்களின் தவறான மருந்துசீட்டால் பலர் ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது. 
இந்த பிரச்சனையை போக்க மத்திய பிரதேசத்தில் இந்துாரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு, கையெழுத்து பயிற்சி அளிக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் கையெழுத்தால் ஏற்படும் பிரச்சனை தீரும் என அம்மாநில அரசு நம்புகிறது.