1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (10:51 IST)

பாம்புக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்

மும்பையில் காயமடைந்த பாம்பிற்கு மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உள்ள தகிசர் பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரோட்டில் ஒரு பாம்பு அடிபட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
மனிதர்கள் ரோட்டில் அடிப்பட்டுக் கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த காலக்கட்டத்தில் பெரியமனதுடைய அந்த காவலர் அவருக்கு தெரிந்த ஒரு நபரை கூப்பிட்டு, அடிப்பட்டுக் கிடந்த அந்த பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார்.
 
மருத்துவமனையில் பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள், பாம்பிற்கு முதுகெலும்பு உடைந்திருப்பதாக கூறினார். மேலும் பாம்பிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. பாம்பிற்கு முழுவதுமாக உடல்நிலை குணமடைந்த உடன் பாம்பு காட்டில் விடப்படும் என மருத்துவர்கள் கூறினர்.