திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (08:02 IST)

மூட நம்பிக்கையால் மற்றொரு நரபலி.. மகளை கொலை செய்த பெற்றோர் கைது!

arrest
கேரளாவில் 2 தமிழ் பெண்கள் நரபலி செய்யப்பட்டதாக வந்த தகவலின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே தற்போது மகளையே பெற்றோர் நரபலி கொடுத்ததாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் 14 வயது சிறுமியை நரபலி கொடுத்தால் வீட்டில் பணம் கொழிக்கும் என்று மந்திரவாதி ஒருவர் கூறியதை கேட்டு மகளை நரபலி கொடுத்து உள்ளனர்
 
மூடநம்பிக்கையால் 14 வயது சிறுமியை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். நரபலி கொடுத்த நான்காவது நாளில் மகள் உயிர் பிழைத்து திரும்பி விடுவாள் என்று மந்திரவாதி கூறியதை நம்பிய பெற்றோர்கள் நரபலி கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது
 
மேலும் நான்கு நாட்கள் கழித்து உயிர் பிழைத்து வராததால் அதன் பின்னர் உடலை ரகசியமாக தகனம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மகளையே நரபலி கொடுத்த பெற்றோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva