செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (08:46 IST)

மருத்துவமனையில் தீ விபத்து; 8 பேர் பலி! – குஜராத்தில் சோகம்!

குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்க கலகத்தில் இருந்ததால் நிலவரம் புரிந்து செயல்படுவதற்கு முன்னராக தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.