ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி – ஆனால் கட்டுப்பாடு உண்டு!
தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கில் தொழில் நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏபர்ல் 20க்கு பிறகு சில தொழில்துறைகள் செயல்பட மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் ஆன்லைன் வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள பொருட்களை உள்நாட்டிற்கு இறக்குமதி செய்வதில் பிரச்சினைகள் உள்ளதால் ஆன்லைன் தளங்களில் வெளிநாட்டு பொருட்களை வாங்குவதற்கான வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே முக்கிய நகரங்களில் மட்டும் அத்திவாசிய பொருட்களை விற்பனை செய்து வந்த ஆன்லைன் நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.