வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (10:16 IST)

அப்பாவின் சூப்பர்ஹிட் பாடலை அற்புதமாக பாடும் ஸ்ருதி ஹாசன் - வீடியோ!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.
 

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பா கமல் ஹாசன் நடித்த நாயகன் படத்தில் இடம்பெறுள்ள "தென்பாண்டி சீமையிலே" என்ற பாடலை அவ்வளவு அற்புதமாக பபாடியுள்ளார். அவரது திறமையை கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’ve always loved this song