1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (18:23 IST)

பாலைவன மாநிலத்தில் கோடிக்கணக்கில் தங்கம்....

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று சற்று ஆறுதலை தந்துள்ளது. ஆம், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடிக்கணக்கில் தங்கம் உள்ளதாம். இதை பற்றிய விரிவான செய்திகள் பின்வருமாறு...
 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.
 
இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள் இந்தியாவின் நிலையையே மாற்றும் என தெரிகிறது. 
 
அங்கு தற்போது நடந்து வரும் சுரங்க பணி வேலையின் போது செம்பு, தங்கம் ஆகியனவும் கிடைத்துள்ளதாம். மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருக்கிறதாம்.