கழிப்பறையில் ஒழுங்காக சிறுநீர் கழிக்கத் தெரியாத சிறுமி – கொலை செய்த காப்பாளர் !
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் சிறுமியின் பாதுகாவலர்களே அவளைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் உள்ள சிறுமி ஒருவருக்கு தந்தை இல்லை. இதனால் அவரது உறவினர்கள சிறுமியை அழைத்துச் சென்று தாங்கள் படிக்க வைப்பதாக சொல்லி நகரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாயும் தனது மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்கள் கழிந்த நிலையில் அந்த தாய் தனது மகளுடன் பேச முயற்சித்த போது, காப்பாளர்கள் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் ’குழந்தை நகரத்துக்கு முதல்முறையாக வந்துள்ளதால் அவளுக்கு கழிப்பறைகளை சரியாகப் பயன்படுத்த தெரியவில்லை என்று கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் தவறு செய்ய, கோபமான காப்பாளர் பிரகாஷ் அவரை உதைக்க சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின் அவர்கள் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு சிமெண்ட் கலவையைக் கொண்டு மறைத்துள்ளனர்.இது சம்மந்தமாக தலைமறைவாக உள்ள பிரகாஷைப் போலிஸார் தேடி வருகின்றனர்.