1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 14 டிசம்பர் 2019 (15:50 IST)

டிக் டாக் வீடியோ வெளியிட்ட மனைவியை அடித்துக் கொன்ற கணவன் !

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள விடுதி ஒன்றில், டிக் டாக் வீடியோ வெளியிட்ட மனைவியை கணவனே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள தனியார் விடுதியில் மணிஷா மற்றும் மஞ்சு ஆகிய சகோதரிகள் இருவரும் தங்கி இருந்தனர். 
 
மனிஷா அருகில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்துவந்துள்ளார். அவருக்கு துணையாக சகோதரி மஞ்சு அதே விடுதியில் தங்கி இருந்துள்ளார்.
 
இந்நிலையில், மஞ்சவும்  சயீப்பும்  காதலித்து, வீட்டை எதிர்த்து  திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சயீப்பின் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்காததால்  இருவரும் தனித் தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
 
இதற்கிடையே மஞ்சு, ஆண் நண்பர்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.அதனால் சயீப்புக்கு மனைவி மீது கோபம் இருந்துள்ளது.
 
இந்நிலையில், சயீப் தன் மனைவியை கொல்ல முஸ்தபா என்பவரிடம் ரூ 7 லட்சத்துக்கு பேரம் பேசியதாக தெரிகிறது.
 
இதனையடுத்து, சயீப்பும், முஸ்தபாவும் சகோதரிகள் இருவரும் தங்கியிருந்த அறைக்கு சென்று அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி மணிஷா மற்றும் மஞ்சுவை அடித்தே கொன்றனர். பின்னர் அங்கிருந்து சயீப்பும், முஸ்தபாவும் தப்பிச் சென்றனர்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு, சிசிடிசி காட்சிகளின் அடிப்படையில், இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.