போலி 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய சிறுமி
திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டது. புதிய 2000 ரூபாய் விநியோகிக்கப்பட்ட இரண்டாவது நாளே அதன் போலி நோட்டு வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடை செய்தது.
அதேபோல் திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ப்ரிண்டர் மூலம் 2000 ரூபாயினை அச்சடித்த ஜெராக்ஸ் கடை உரிமையாளட்கள் சந்தீப் குமார், ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கருப்பு பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்க இத்திட்டம் என்று மோடி அறிவித்தார். ஆனால் புதிய நோட்டு வெளியான வில நாட்களிலே அதன் போலி நோட்டை மக்களே தயார் செய்து வருகின்றனர்.