வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (20:33 IST)

சிறுமியை வன்புணர்வு செய்து... கண்களை தோண்டியெடுத்த கொடூரம்...

உத்தரபிரதேச மாநிலம் ஜாலன்  மாவட்டத்தில் உள்ள ஆட்டா என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்த வந்த சிறுமி திடீரென்று காணாமல் போனார். அதனால் அவரது பெற்றோர் பதறியடித்து போலீஸாருக்கு புகார் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியை தேடிவந்தனர்.
காணாமல் போன சிறுமியை பல்வேறு இடங்களில் போலீஸார் தேடிவந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி ஜான்சி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
 
இதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த அஹில்வார் என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.