குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு - உ.,பியில் அதிர்ச்சி

up
Last Modified வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள மதியவுணவு கொடுக்க வேண்டும் என அறிமுக்கப்பட்டது. இந்நிலையில்  சில மாநிலங்களில் சரியாக பள்ளி மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது இல்லை என தகவல் வெளியாகின்றது.
 
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர்க்கு மதியவுணவாக சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. 
 
உ..பியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் சிறுவர்களின் பெற்றோரிடம் கேட்டதற்கு,சப்பாத்தியும் ரொட்டியும் கொடுப்பார்கள்,சில சமயம் சாதமும், உப்பும் கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்து மாவட்ட மாஜிஸ்ரேட் அனுராக் பட்டேலிடம் சிலர் முறையிட்டனர். இதன் உன்மைத் தன்மை தெரிந்தபிறகு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :