புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (20:39 IST)

பாஜக தோற்ற தொகுதி தீவிரவாதிகளின் இடமாக மாறும்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற 3 மக்களவை இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்தது. இதில் குறிப்பாக உபி முதல்வர் யோகியின் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கும் உபி முதல்வருக்கும் பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த நிலையில் பிகார் அராரியா மக்களவைத் தொகுதி விரைவில் தீவிரவாதிகள் சங்கமிக்கும் இடமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறிய சர்ச்சை கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அராரியா தொகுதியில் லாலு கட்சியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் சர்பிராஸ் ஆலம் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி லாலு கட்சியினர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த வெற்றி குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பீகாரின் அராரியா தொகுதி, நாட்டின் எல்லைப் பகுதியை ஓட்டிமட்டும் அல்ல, நேபாளம், வங்காளதேசத்துக்கு அருகே உள்ள தொகுதி ஆகும். அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் கொடிய சிந்தாத்தங்களை கொண்டவர்கள். இது பிகார் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஆபத்து. விரைவில் அராரியா தொகுதி தீவிரவாதிகளின் கூடாரமாகவும், சங்கமிக்கும் இடமாகவும் மாறும் என கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த லாலுவின் மனைவியும் முன்னாள் பீகார் முதல்வருமான ரஃப்ரிதேவி, 'அனைத்து தீவிரவாதிகளும் பாஜக அலுவலகத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.