வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (15:54 IST)

தீவிரவாதத்திற்கு உதவுகிறதா அமெரிக்கா? ரஷ்யா வெளியிட்ட வீடியோ ஆதாரம்....

தீவிரவாத அமைப்பான ஐஎஸைஎஸ்-க்கு அமெரிக்கா உதவுவதாக ரஷ்யா ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.


 
 
ரஷ்யா வெளியிட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறது என்று விளக்கப்பட்டு இருக்கிறது. 
 
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறுது நேரத்தில் இது டெலிட் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகியது.
 
அதாவது இது உண்மையான வீடியோ இல்லை, ஒரு வீடியோ கேம் என தெரியவந்ததால் அது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இது பிரபல ஏசி-130 வீடியோ கேம் ஆகும்.
 
அதைதான் ரஷ்யா இணையத்தில் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமெரிக்கா பணம் கொடுத்து உதவுவதும், சிரியா மற்றும் ஈராக் நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்காமல் அமெரிக்கா காப்பாற்றுவது போலவும் இருந்தது.
 
மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வாகனங்களை பராமரிப்பதும், அவர்களுக்கு போர் முறைகளை சொல்லி கொடுப்பதும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.