மஹாராஷ்டிர மாநிலத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து...17 பேர் உயிரிழப்பு
மகராஷ்டிர மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள தானேயின் ஷாஹபூரில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நேற்றிரவு ஒரு ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 17 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் கூறியதுடன் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.