திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (08:51 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை அங்கப்பிரதட்சண டோக்கன்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை அங்கப்பிரதட்சணம் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு 500 ரூபாய் டிக்கெட் டோக்கன் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் டோக்கன் தினமும் 750 டோக்கன் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
நாளை ஆன்லைனில் இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தேவைப்படுபவர் இந்த டோக்கன்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது