திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:25 IST)

திருமணமான கையோடு மன்னிப்பு கடிதம் எழுதிய விக்கி!

திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். 

 
இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர். திருமணமான அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த புகைப்படங்கள் வைரலானது. 
 
இந்நிலையில் நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார். சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்த போது நயன்தாரா காலணிகள் அணிந்து வந்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 
இதனிடையே திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். அதில் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்கத் தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன். போட்டோஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை என்று விக்னேஷ் தெரிவித்திருக்கிறார். 
 
திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்கு மாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும் என்பது கூடுதல் தகவல்.