ரக்ஷா பந்தனுக்கு இலவச பேருந்து - அரசு உத்தரவு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன்.
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு ஹாரியானா மாநில அரசு அனைத்துப் பெண்களுக்கும் பேருந்துகளில் ஒருநாள் மட்டும் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்தது.
அரசின் உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று உத்திரபிரதேச மாநில அரசும் ரக்ஷா பந்தனுக்கு அந்த ஒருநாள் மட்டும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதியநாத் தெரிவித்துள்ளார்.