அமெரிக்கா அனுப்புவதாக பணம் மோசடி.. நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்கள்!
அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இந்தியர்களிடம் லட்சங்களில் பணத்தை ஏமாற்றி அவர்களை நேபாளத்தில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் பலர் தங்கள் பொருளாதா நிலையை பெருக்கிக் கொள்ள வெளிநாட்டு வேலைகளுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆர்வத்தை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பண மோசடியில் ஈடுபடுவதும் தொடர் கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக இந்தியர்கள் பலர் இந்தோனேசியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல தற்போது ஒரு மோசடி சம்பவத்தால் இந்தியர்கள் பலர் நேபாளத்தில் சிக்கி தவித்துள்ளனர். அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக இந்தியர்களிடையே வலைவிரித்த கும்பல் ஒன்று நபர் ஒருவருக்கு ரூ.45 லட்சம் வரையிலும் பணத்தை பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களை நேபாளம் வர செய்த அவர்கள் அங்கிருந்து சில நாட்களில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நேபாள போலீஸார் அங்கு சென்று 11 இந்தியர்களை மீட்டதுடன் அவர்களை ஏமாற்றி பணம் பறித்த ஏஜெண்டுகளாக நடித்த 7 பேரை கைதும் செய்துள்ளனர். அமெரிக்க ஆசையில் பணத்தை இழந்ததுடன், ஒருமாத காலமாக வீடு ஒன்றில் இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K