செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (16:48 IST)

கவர்னர் ஆகிறார் முன்னாள் முதலமைச்சர்.. விரைவில் அறிவிப்பு!

Amarinder Singh
முன்னாள் முதலமைச்சர் கவர்னர் ஆகப்போவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி என்பவர் விரைவில் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் அவருக்கு பதிலாக மகாராஷ்டிரா மாநில ஆளுநராக முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகிய அம்ரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்கி அதன் பின்னர் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva