வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (09:00 IST)

பாஜகவில் இணையும் முன்னாள் பிரதமரின் மகன்!

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 10 முதல் 1991 ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை பிரதமராக இருந்தார். இந்த நிலையில் அவரது மகன் நீரஜ்குமார் தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ்குமார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பல்லியா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்பி ஆனார். அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்
 
இந்த நிலையில் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நீரஜ்குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த மே மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவருக்கு வாய்ப்பு தர மறுத்து விட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன
 
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த நீரஜ்சேகர், தற்போது பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவர் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு எம்பி ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள் பிரதமரின் ஒருவரின் மகன் பாஜகவில் இணைந்து இருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது