1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (18:20 IST)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டுகள் சிறை!

jail
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது
 
இந்த தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுத்ரி முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது