காதலிகளுக்கு 'கிஃப்ட்' பண்ண.. ’ஆப்பிள் ஐபோன்’களை திருடிய இளைஞர்கள் !
நாட்டில் தலைநகர் டெல்லியில், கடந்த வியாழக்கிழமை அன்று. அங்குள்ள சாஸ்திரி தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்க்காக ஒரு வாலிபர் சென்றுள்ளார்.
அப்போது, அவரை இரு இளைஞர்கள் மறித்து அவரிடம் இருந்து செல்போன்களை பறித்து அங்கிர்நுஹ்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து அந்த நபர் போலிஸில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் பொருட்களை ஆர்டர் செய்வார்கள் என தெரிந்துகொண்டு, இந்த ஐபோன் வழிப்பறியில் ஈடுபட்டு, அதை தங்களின் காதலிக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக இதைச் செய்தோம் என குற்றவாளிகள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.