டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு கால்பந்து வீரர் நிதி உதவி
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ஜுஜூ ஸ்மித் சுமார் 7.28 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல பாட பாடகி ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார். அவர்
2 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருவது ரிஹானாவின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினப் பெண் மீனா ஹாரிஸ் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். அவரைத் தொடந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டாவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சர்வதே அளவில் இப்போராட்டம் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க கூடைப்பந்தாஅட்ட வீரர் கைல் குஸ்மா( என்பி ஏ அணி) மற்றும் ஜூஜூ ஸ்மித் ( அமெரிக்க தேசிய கால்பந்து அணி) வீரர் ஆகிய இருவரும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில், கால்பந்தாட்ட வீரர்( என்.எஃப்.எல்) வீரர் டெல்லியில்போராடும் விவசாயிகளின் மருந்து செலவிற்கு ரூ.7.28 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.