ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி - வேலை பறிப்பில் தீவிரம்
ஃபிளிப்கார்ட் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 700 பேரின் வேலையை பறித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் பணியாளர்கள் வேலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. சிறப்பாகச் செயல்படவில்லை என்ற காரணத்தைக் கூறி ஆயிரம் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது.
செலவுகளைக் குறைப்பதற்காக ஃபிளிப்கார்ட் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, 'நாங்கள் மட்டும் இதனைச் செய்யவில்லை, சந்தையில் அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிப்பதுதான். எங்கள் நிறுவனத்தில் சிறப்பாகச் செயல்படாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் குறித்த தகவலை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.