புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:55 IST)

விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை: ரூ.50 லட்சம் திரட்டிய பயணிகள்

Flight
விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை கட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் முடிவு செய்துள்ளனர் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 18 பேர் பலியாகினர் என்பதும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விமான விபத்து நடந்தவுடன் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றினர்.
 
இந்த நிலையில் அந்த கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விமானம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி அந்த கிராமத்தில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளனர்
 
இந்த மருத்துவமனையில் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மருத்துவமனை காணப்படுவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்