1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (12:08 IST)

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

Flights
மூன்று மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால், அந்த விமானத்தை ரத்து செய்து விடலாம் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக விமானம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், பயணிகளை அலைக்கழிக்க வேண்டாம் என்றும், மூன்று மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால், விமானத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு முன்பே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், செக்-இன் கவுண்டர்களில் அதிக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் விமான நிறுவனங்களிடம் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். மூன்று மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.



Edited by Mahendran