செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (21:44 IST)

சர்வதேச விமான டிக்கெட் விலை: 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!

கொரோனா பெரும் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் இந்தியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை விலக்கி உள்ளது.
 
இந்த  நிலையில் சர்வதேச விமான டிக்கெட் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பயண கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் விதித்து இருந்ததால் விமான டிக்கெட் விலை சுமார் இரு மடங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது
 
 தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகவும், வரும் நாட்களில் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாலும் கட்டணம் குறையும் என கூறப்படுகிறது.
 
சிங்கப்பூர் ஆன்லைன் 17% அதிக விமானங்களை அதிகமாக இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன