1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:28 IST)

தாஜ்மஹால் முன் யோகா செய்த பெண்களிடம் மன்னிப்பு கடிதம்: பெரும் பரபரப்பு..!

தாஜ்மஹால் முன்பு யோகா செய்த ஐந்து பெண்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி தொல்பொருள் துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தாஜ்மஹால் முன்பு 5 பெண்கள் யோகாசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. அங்குள்ள சிவப்பு மணல் மேடையில் 5 பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்து அதனை அடுத்து யோகா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து அந்த பெண்களிடம் மதிய தொழில் துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது பெண்கள் தாஜ்மஹாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்களை எச்சரிக்கை செய்த அதிகாரிகள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Mahendran