செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (16:55 IST)

டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை அடித்து துவைத்த பெண் போலீஸ்: வீடியோ!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் போலீஸ் ஒருவர் பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் அமர்ந்திருந்த பெண் காவலரிடம், பேருந்து பயணத்துக்கான 15 ரூபாய் டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்குபடி பெண் நடத்துனர் கேட்டுள்ளார். 
 
ஆனால், அரசு ஊழியரான நான் இலவசமாக தான் பயணம் செய்வேன் என காவலர் கூறியுள்ளார். இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. 
 
நடத்துனர், காவலரின் தோளில் கை வைத்து தள்ள ஆத்திரமடைந்த காவலர், நடத்துனரை சரமாரியாக அடித்துள்ளார்.
 
இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதோ அந்த வீடியோ...