செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (10:26 IST)

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசுப்பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் கார் தூக்கி வீசப்பட்டு காரில் இருந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.


 
 
ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று அவினாசி அருகே தெக்களூர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. 6 வழிச்சாலையில் அரசுப்பேருந்து ஒன்று அந்த காரின் மீது மோதியதில் கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
 
அரசு பேருந்து மோதிய வேகத்தில் பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்ததால் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காரை இடது புறமாக பேருந்து முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகவும், காரின் ஓட்டுனர் படுகாயங்களுடன் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.