ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!
தனது தந்தை ஸ்மார்ட்போன் வாங்கி தரவில்லை என்ற கோபத்தில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகனின் மரணத்தை தாங்க முடியாமல் தந்தையும் அதே கயிறில் தூக்கில் தொங்கிய சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஓம்கார் என்ற சிறுவன் தனது தந்தையிடம் ஸ்மார்ட் போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் ஸ்மார்ட்போனை வாங்க முடியாது என்றும் தந்தை மறுத்துள்ளார். இதனால் ஓம்கார் மன வருத்தத்தில் இருந்த நிலையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தனது வீடு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி மகன் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை துக்கத்தில் மூழ்கி, தனது மகனின் உடலில் உள்ள கயிறு அவிழ்த்து விட்டு அதே கயிற்றில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்மார்ட்போன் விவகாரத்தால் தந்தை, மகன் என இருவரும் மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் இருவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Edited by Siva