பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சிறுமி வன்கொடுமை - இளைஞர் கைது!
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் சாஹேபூர் கமல் பகுதியைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் சாஹேபூர் கமல் பகுதியில் பஞ்ச்வீர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகள் அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளி வளாகாத்தில் இரு சிறுமிகள் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சோட்டி மஹாட்டோ என்ற நபர் சிறுமிகள் தவறாக நடந்துள்ளார்.
உடனே, சிறுமிகள் அவரிடமிருந்து தப்பித்துச் சென்றனர்,. அவர்களைத் துரத்திய சோட்டி, அவர்கள் பள்ளிக் கழிவறையில் சென்றதைப் பார்த்து, மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி, சிறுமி ஒருவரைப் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மற்றொரு சிறுமையை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
சிறுமிகளின் அலறல் சத்தம்கேட்டு, அருகிலுள்ளோர் வந்து சிறுமிகளை மீட்டனர். அதற்குள் சோட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.