திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:43 IST)

இங்கிலாந்து ராணிக்கு ஆயுர்வேத சிகிச்சை! இந்தியா வந்த காரணம் இதுதானாம்!

Camila
சமீபத்தில் இங்கிலாந்து ராணியான கமிலா இந்தியா வந்துள்ள நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்த நிலையில் அவரது மகன் சார்லஸ் அரசராக பொறுப்பேற்றுள்ளார். அவரது மனைவி கமிலா ராணியாக மகுடம் சூடியுள்ளார். இந்நிலையில் மகாராணியாக கமிலா தனது முதல் பயணமாக இந்தியா வந்துள்ளார்.


தனது பாதுகாப்பு படைகளுடன் இந்தியா வந்துள்ள அவர் பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தன்னை அழகுப்படுத்தி கொள்வதற்காக சிகிச்சையில் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக அவர் இங்கு 10 நாட்கள் தங்கி இருப்பார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த 10 நாட்களும் இந்திய அரசியல் தலைவர் உள்ளிட்ட யாரையும் அவர் சந்திக்க போவதில்லை என்றும், முழுக்க தனிப்பட்ட பயணம் மட்டுமே இது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து இளவரசரின் மனைவியாக 7 முறை இந்தியா வந்துள்ள கமிலா மகாராணியாக இந்தியாவிற்கு வருவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Prasanth.K