தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது நாடு முழுவதும் பரபரப்பையும் விவாதாத்தையும் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே ஒரு காலியா இருந்த நிலையில், அருண் கோயலின் ராஜினாமாவால் காலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளதால் தேர்தல் அறிவிப்பு முன்பே ஆணையர்கள் நியமனம் செய்யப்படலம என தகவல் வெளியாகிறது.
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ வங்கி கால அவகாசம் கோரியிருந்த நிலையில், வங்கியின் மனு வரும் 11 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.