திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (17:29 IST)

பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி- மாயாவதி அறிவிப்பு

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,   திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட  நிலையில், சமீபத்தில் பாஜக முதற்கட்ட  மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
 
இதையடுத்து,  பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக  ஆம் ஆத்மி உள்ளிட்ட  கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில்,   சமீபத்தில்  காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த பின், நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
 
இந்த  நிலையில், மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது மூன்றாவது அணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. 
 
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளதாவது:
 
 ''பகுஜன் சமாஜ்  கட்சி வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும். பிற  கட்சிகளுடன்  நாங்கள் கூட்டணி அமைக்கப் போவதாகவும், 3 வது அணி அமைக்கப்போவதாகவும், வெளியான தகவல் அனைத்தும் வதந்திதான் என்று'' தெரிவித்துள்ளார்.

எனவே இக்கட்சியின் தேர்தல் வாக்குறுதி மற்றும் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.