செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:24 IST)

தேர்தல் விதிமுறைகள் மீறல்.. மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Modi Congress
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பிரிவினை குறித்து பேசியதாக பாரதிய ஜனதாவும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன 
 
இந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தலைவர்களின் பேச்சு கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகுந்த கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran