வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (12:07 IST)

முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து.. பாஜகவின் எக்ஸ் பதிவு நீக்கம்..!

முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்திருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பாஜக அந்த பதிவை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
எஸ்சி, எஸ்டி மற்றும் பட்டியல் இனத்தவரின் இட ஒதுக்கீட்டை பறித்து அதை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்று கர்நாடக மாநில பாஜகவின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்ததை அடுத்து இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. 
 
பட்டியலில் இனத்தவர் மற்றும் முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த பதிவை நீக்கும்படி கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு அறிவுறுத்தியது. 
 
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தலை அல்லது கர்நாடக மாநில பாஜக அந்த பதிவை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் இந்த பதிவு வெறுப்புணர்ச்சியை தூண்டி விடுவதாக இருப்பதாக கர்நாடகா காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran