1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (13:10 IST)

ஜம்மு காஷ்மீரின் முக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Election
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தொகுதியான அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவில்லை என்றாலும் பாராளுமன்ற தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் அங்குள்ள அனந்த்நாக்-ரஜோரி என்ற தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இந்த உத்தரவுக்கு குலாம் நபி ஆசாத் நன்றி தெரிவித்துள்ளார். அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கு செல்லும் சாலை பனி காரணமாக மூடப்பட்டிருப்பதாகவும் இதனால் அந்த தொகுதி மக்கள் வாக்களிக்க சிரமப்படுவார்கள் என்றும் எனவேதான் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த தொகுதியில் மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran