ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (08:11 IST)

மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: பணமோசடி செய்தாரா?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆக இருந்த மஹுவா மொய்த்ரா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக குற்றச்சாட்டு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது

இந்த நிலையில் அமலாக்கத்துறையும் மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பணம் கொடுத்த தொழிலதிபர் தர்ஷன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பண மோசடி பிரிவில் அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தன் மீது வழக்குகள் இருந்தாலும் மஹுவா மொய்த்ரா வரும் பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போட்டியிடும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஆரம்பத்திலிருந்து நிராகரித்து வரும் நிலையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் தற்போது அவர் மீது சிபிஐ மட்டும் இன்றி அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் அவர் எப்படி மீண்டும் வருவார் என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது.

Edited by Siva