ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (16:50 IST)

டீ கடைக்கும், இட்லி கடைக்கும் சண்டை: கொதிக்கும் எண்ணெயால் காயமடைந்த வாடிக்கையாளர்கள்!

டீ கடைக்கும், இட்லி கடைக்கும் சண்டை: கொதிக்கும் எண்ணெயால் காயமடைந்த வாடிக்கையாளர்கள்!

கொல்கத்தாவில் டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்கள் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய டீ கடைக்காரர் மற்றும் அவரது ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


 
 
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் டீ கடை ஒன்றில் முதியவர்கள் சென்றுள்ளனர். நடைபயணம் சென்ற முதியவர்கள் முடிந்ததும் அங்கிருந்த டீ கடை ஒன்றுக்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்துள்ளனர்.
 
அந்த சமயம் அந்த வழியாக இட்லி விற்பவர் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் இருந்து இட்லி வாங்கி டீ கடை இருக்கையில் இருந்தே சாப்பிட்டுள்ளனர் அந்த முதியவர்கள். இதனையடுத்து அந்த டீ கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், இட்லி விற்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
 
பின்னர் முதியவர்களும், டீ கடைக்காரருடன் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் திடீரென கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து, முதியவர்கள் மற்றும் இட்லி விற்பவர் மீது ஊற்றினர் டீ கடைக்காரர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் டீ கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
 
முதியவர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் காவல்நிலையத்தில் டீ கடை உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.