1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

பஞ்சாப் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

earthquake
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் என்ற பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று அதிகாலை 3 42 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் இல்லை என்றாலும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பெரும் அச்சத்துடன் அந்த பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva